டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் “ஆா்ஆா்ஆா்” படம் சென்ற மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியாகிய இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதோடு உலகளவில் ரூபாய்.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இதற்கிடையில் பேட்டி ஒன்றில் ராஜமௌலி “எனக்கும் கடவுள் நம்பிக்கையில்லை. எனினும் எனது கருத்தை படத்தில் திணிக்க விரும்பமாட்டேன். சினிமா வணிக ரீதியிலானது ஆகும். மக்கள் அதை விரும்புவதால் அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். நான் கடவுள் நம்பிக்கையற்றவன். மதம் என்பது சுரண்டல் தன்மையுடையது” என அவர் கூறியிருந்தார்.

இக்கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துஉள்ளார். இதுகுறித்து கங்கனா கூறியிருப்பதாவது “அவர் மீது விமர்சனம் வைக்கும் அளவிற்கு என்ன செய்துவிட்டார்?. நமது தொலைந்துபோன நாகரீகத்தை பாகுபலி படமாக எடுத்ததற்காவா? (அ) ஆர்ஆர்ஆர் போன்ற தேசியவாத படத்தினை எடுத்ததற்காவா..?, சர்வதேச சிவப்பு கம்பள வரவேற்பில் வேஷ்டி சட்டை அணிந்ததற்காவா?.

அவர் செய்த தவறு எது தெரியுமா?. அவர் இந்நாட்டை காதலிக்கிறார். உள்ளூர் சினிமாவை உலக சினிமாவுக்கு கொண்டு சென்றார். அவர் இந்நாட்டிற்கு அர்பணிப்புடன் இருந்து உள்ளார். அது தான் அவர் செய்த தவறு. எவ்வளவு தைரியமிருந்தால் இந்த நாட்டில் இருப்பவர்கள் அவரது நேர்மையை கேள்வி கேட்கிறார்கள்? உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?.. என கங்கனா குறிப்பிட்டிருந்தார்.