
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, புதிய வரலாற்றை படைக்க தயாராக இருங்கள். நாம் புதிய வரலாற்றை படைக்க தயாராக வேண்டும். ஒரே குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா? மாநாடு முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஏராளமான தடைகள். மக்கள் பிரச்சினைகளை மடை மாற்றி மக்கள் விரோத ஆட்சியை, மன்னர் ஆட்சி போன்று நடத்தி வருகிறார்கள்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிலான ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை முறையாக கடைப்பிடிப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவம் அனைத்திலும் மிகவும் கவனம் செலுத்தப்படும். மகளிருக்கு எதிரான வன்கொடுமையை சொல்ல முடியவில்லை. இதில் உங்களை அப்பா என்று சொல்வதாக கூறுகிறீர்கள்.
திமுக ஆட்சிக்கும் அரசியலுக்கும் என் சகோதரிகளான தமிழ்நாட்டு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள். ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி. ஊழலுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக. 2026 சட்டமன்ற தேர்தலில் வித்யாசமான தேர்தலை தமிழ்நாடு பார்க்கும். இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி நடக்கும். ஒன்று தமிழக வெற்றி கழகம். மற்றொன்று திமுக என நேரடியாக விமர்சித்து பேசியுள்ளார்.