
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று கொடூர சம்பவம் ஒன்று நடந்தது தற்போது அம்பலம் ஆகியுள்ளது. தேவிலால் என்பவரின் மனைவி பாவனா. இந்நிலையில் தேவிலாலிடம் சீதா என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். தேவிலாவுக்கு சீதாவோடு தொடர்பு ஏற்பட்டது. இது தன்னுடைய மனைவி பாவனாவுக்கு தெரியவந்ததையடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து சீதாவை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர்.
இதனையடுத்து கடந்த மாதம் கொன்றுள்ளார்கள். அதேபோல தேவிலால் ஒரு வருடத்திற்கு முன்பாக சீதாவின் மகன்களில் ஒருவரை அடித்து கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சீதாவை கொன்ற ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.