
தென்காசி மாவட்டத்தில் நடந்த குத்தாலிங்கம் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜவுளிக்கடை உரிமையாளராக இருந்த குத்தாலிங்கம் கடந்த 16ம் தேதி தனது மனைவியுடன் ரேஷன் கடையில் இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று தாக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
அதுமட்டுமல்லாமல், அவரது தலையை துண்டித்து, குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் அம்மன் கோயிலருகே வைத்து சென்றனர். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலீசார் தொடர்ந்த விசாரணையில், இது பழிக்குப் பழியாக நடந்த கொலை என்பதும், கடந்த ஆண்டு நடந்த பட்டுராஜ் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்தில் அவரின் உறவினரான குத்தாலிங்கம் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் ரமேஷ், ஹரிகரசுதன், செண்பகம், மணி ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். அதிலும் முக்கியமாக, கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பட்டுராஜின் மனைவி மகாதேவி பெயரிலும் கொலை சதியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மகாதேவிக்கு 1 வயதில் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.