குஜராத் மாநிலம் சூரத்தில் 41 வயதான அல்பேஷ்பாய் காந்திபாய் சோலங்கி என்பவர், பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி ஜிலா. இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில், மனைவிக்கு நரேஷ்குமார் ரத்தோட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து ஜிலாவிடம் கேட்ட போது கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அல்பேஷ்பாய், தனது 7 மற்றும் 2 வயது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட உறவினர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது, அல்பேஷ்பாயின் உடல் தரையிலும், குழந்தைகள் படுக்கையிலும் உயிரிழந்த நிலையில் இருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அல்பேஷ்பாயின் மொபைல் போனில் இருந்து 5 பக்கங்கள் கொண்ட தற்கொலைக் குறிப்பு, 2 டைரிகள் மற்றும் சில வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக ஒரு டைரி முழுக்க அவரது மனைவிக்கு எழுதியதுபோல் காணப்படுகிறது. இதில் அவர் உணர்ச்சிவசப்பட்டு எழுதியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார், ஜிலாவையும், நரேஷ் குமாரையும் கைது செய்துள்ளனர். தம்பதிக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
