தமிழ் சினிமாவில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக நுழைந்து தற்போது முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் 3 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு மெரினா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகின்றார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு திருமணம் முடிந்து நேற்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவகார்த்திகேயன் திருமண நாளை கொண்டாடி மனைவிக்கு போட்ட சர்ப்ரைஸ் பதிவு ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.