மனிதாபிமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பு வழங்கியதன் மூலம் இந்தியா, பாகிஸ்தானில் சுமார் 1.5 லட்சம் குடிமக்களின் உயிர்களை பாதுகாத்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் இந்திய அணைகள் நிரம்பி வழிந்ததால், தாவி ஆற்றில் வெள்ள அபாயம் இருப்பதாக பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழியாக நேரடியாக எச்சரிக்கை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடமாற்றப்பட ஏற்பாடுகள் செய்ததனால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்கனவே 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா வழங்கிய எச்சரிக்கைகள் “மனிதாபிமான அடிப்படையில்” செய்யப்பட்டவை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
