உலகம் முழுவதும் வருகிற 25ஆம் தேதி கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தற்போதைதே  பண்டிகை களைகட்ட தொடங்கிவிட்டது. இந்நிலையில் மத்திய மந்திரி ஆக இருக்கும் ஜார்ஜ் குரியன் வீட்டில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட மத்திய மந்திரிகள் மற்றும் பாஜக எம்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில் இது தொடர்பாக அவர் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த முக்கிய நபர்களுடன் ஆலோசனை நடத்தினேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் தன்னுடைய x பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.