நாடாளுமன்றத்தில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். நாடு முழுவதும் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களுக்கு நிதி விடுவிக்க வேண்டும். அதன் பிறகு சென்னை மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கு 3 வருடங்களாக விடுவிக்கப்படாமல் இருக்கும் நிதி தொகையை விடுவிக்க வேண்டும்.

தாம்பரம் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலைக்கான பணிகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இதேபோன்று சென்னை மற்றும் கோவை இடையேயான மெட்ரோ ரயில் சேவைகளுக்கும் ஒப்புதல் வழங்க வேண்டும். அதன் பிறகு பத்து வருடங்களாக வருமான வரி சுமை குறைக்கப்படும் என்று நடுத்தர மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கிராமபுற  மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் போன்றவைகளாகும். மேலும் தமிழக மக்களின் கோரிக்கைகளை நிச்சயம் மத்திய அரசு நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.