மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஜனவரி மாதத்தில் நான்கு சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி குறித்து அறிவிப்பு எப்போது வரும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அக்டோபர் மாதம் தற்போது தொடங்கியுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்வு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் நவராத்திரியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் அகலவிலைப்படிக்கான பலன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் நாட்டின் நிலவும் பணவீக்கம் காரணமாக மூன்று சதவீதம் மட்டுமே அகலவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.