
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 1,600 மத்திய அரசு வேலைகள் நிரப்பப்படும்.
இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகளுக்கு எழுத்தர்/ ஜூனியர் செயலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உட்பட குரூப் சி பதவிகள் உள்ளன.
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் ஜூன் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இந்த தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 23 வரை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.