ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் நம்கும் பகுதியைச் சேர்ந்த அச்சிறுமி, கடந்த மார்ச் 31-ம் தேதி தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கச் சென்றுள்ளார்.
மேலும் அங்கு மதுபோதையில் இருந்த அவரது நண்பர் உட்பட நான்கு சிறுவர்கள், சிறுமியைத் தனிமைப்படுத்தி இந்தப் பயங்கரமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 16-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், 15 முதல் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது போதையில் அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
