தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு காவல்துறையினர் 17 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதாவது மாநாட்டுக்கு வரும்போது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மது அருந்திவிட்டு வரக்கூடாது என புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்பிறகு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை ஓட்டிவரக் கூடாது என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு சாலை விதிகளை மீறக்கூடாது, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக  நடைபெற இருக்கும் நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தங்களுடைய கட்சி கொள்கைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு  2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.