
சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வைகோ தலைமை தாங்கினார். இந்த நிலையில் கூட்டம் முடியும் முன்பாகவே துரை வைகோ கோபித்துக் கொண்டு கூட்டத்திலிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது.
அவர் கோபித்துக்கொண்டு காரில் சென்றார். உடனே மதிமுக நிர்வாகிகள் அவரை பின்தொடர்ந்து சென்றனர். மேலும் தவறாக பேசியிருந்தால் மன்னிச்சுக்கோங்க என மூத்த நிர்வாகி அவர்கள் துரை வைகோவிடம் மன்றாடினார்.
அப்போது தொண்டர் ஒருவர் அவனை வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போறேன் என துரை வைகோவிடம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.