கமல் நடித்த குணா படத்தில் வரும் கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாயஸ் திரைப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் குணா படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 33. மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரத்திற்கு தற்போது 33 வயது. சரியாக, குணா திரைப்படம் வெளியாகியும் 33 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதே அது.