பொதுவாகவே மஞ்சள் என்பது சமையலறையில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கும். அதுவே இந்துக்களை பொருத்தவரை மங்களகரமான ஒரு பொருளாகவும் மஞ்சள் கருதப்படுகின்றது. இந்தியா போன்ற நாடுகளில் மங்கள நிகழ்சிகளில் மஞ்சள் இடம் பெறும். உண்மையிலேயே மஞ்சளை நம்முடைய முன்னோர்கள் முதன்மைப்படுத்தி வைத்ததற்கு பல காரணங்கள் உள்ளது. மஞ்சளை நாம் அனைவரும் உணவில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதன் மருத்துவ குணம் குறித்து நாம் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. அது குறித்து எதிர்பார்க்கலாம்.

மஞ்சள் என்பது ஒரு இயற்கை எண்டிபயோட்டிக். நம்முடைய முன்னோர்கள் குளிப்பதில் தொடங்கி வாசலில் தெளிப்பது வரை இதனை பயன்படுத்தினர். மஞ்சள் புற்று நோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும். இதனால்தான் ஆரம்ப காலத்தில் மஞ்சள் தாலியாக கட்டும் வழக்கம் இருந்து வந்தது. தாலியை தங்கத்தில் அணிந்தாலும் அதனை மஞ்சள் கயிற்றில் கட்ட வேண்டும் என்பதற்கும் இதுதான் காரணம். இதனைப் புரிந்து கொள்ளாத பலரும் தங்கத் தாலிக்கொடிகளில் தாலியை அணிந்து கொண்டு தங்களின் அறியாமையை கௌரவமாக நினைக்கும் அவல நிலை இன்று உள்ளது. மஞ்சள் இதய நோய் அபாயத்தை குறைக்கும். வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தை குறைக்கவும் உதவுகின்றது. மஞ்சள் இதய நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.