
ஐபிஎல் சீசனின் 11வது லீக் ஆட்டம் ஆனது கௌகாத்தியில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு அடுத்ததாக களமிறங்கிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.
R. Ashwin got his man Nitish Rana 81(36)
One of the worse match with ball for Ash 4-46-1#IPL2025 #csk #Dhoni pic.twitter.com/NmjPq6AKV3
— Arv (@Arv922137579481) March 30, 2025
இதன் மூலமாக ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. நிதிஷ் ராணா இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார். அஸ்வின் வீசிய 12 வது ஓவரில் ஒரு சிக்ஸ் ஒரு 4 என அதிரடியாக ஆரம்பித்தார். அந்த ஓவரின் மூணாவது பந்து வீசும் போது ராணா இறங்கி வந்து அடிக்க முயன்றதை முன்பே கணித்த அஸ்வின் பந்தை வைடாக வீசினார். அப்போது தோனி சிறப்பாக ஸ்டம்பிங் செய்து அந்த விக்கெட்டை தூக்கினார். 200 ரன்களுக்கு மேல் அடிக்க வாய்ப்பு இருந்த ராஜஸ்தான் அணி 181 ரன்கள் அடித்ததற்கு அஸ்வின் எடுத்த இந்த விக்கெட் தான் முக்கிய காரணம்.