மகாராஷ்டிரா மாநிலம் ஆலியா நகர் பகுதியில் உள்ள ரஹூரியில் ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவின் கோபுரத்தில் பச்சைக்கொடி கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் சில மர்மநபர்கள் தர்காவின் மீது ஏறி பச்சை கொடியை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக காவி கொடியை கட்டியுள்ளனர். இந்த காவி கொடியை ஏற்றும் போது சிலர் கைதட்டி உற்சாகப்படுத்தியதோடு ஜெய் ஸ்ரீ ராம் என்றும் முழக்கமிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அதனை தடுக்க முயற்சிக்கவில்லை எனவும் ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் அதாவது மார்ச் 26 ஆம் தேதி நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் காரணமாக பெரிய அளவில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படும் நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.