“தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு ஒரு மாபெரும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை நாங்கள் முன்கூட்டியே கணிக்கத் தவறிவிட்டோம்” என்று கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாகப் பேட்டியளித்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சில இடங்களில் தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் மத்தியில் நிலவிய அதிருப்தியின் வீரியத்தை முன்கூட்டியே அறியாமல் விட்டுவிட்டதாக ஓப்பனாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த இந்த ஆட்சி மாற்றம் குறித்த அவரது இந்த வாக்குமூலம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.​மேலும், நடந்து முடிந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.

“நாங்கள் அன்று மட்டும் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கும் அந்த முடிவை எடுக்காமல் போயிருந்தால், இன்று தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி தான் அமலுக்கு வந்திருந்திருக்கும்” என்று பெ.சண்முகம் வெளிப்படையாகக் கூறியிருப்பது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.