கரூர் மாவட்டத்திலுள்ள சேமங்கி சுற்றுவட்டார பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பாக ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழு இணைந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் நேராக சென்று பொது மக்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்த அளவு, சளி, இருமல், காய்ச்சல் போன்ற பரிசோதனைகள் செய்து அவற்றிற்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் கொடுத்துள்ளனர்.

அதேபோன்று சத்தான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும் மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக கூறி வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நீண்ட நாட்கள் தண்ணீரை சேமிக்க கூடாது என்றும்அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.