வரும் 25ஆம் தேதி 100 ஆண்டுகளுக்கு பிறகு ஹோலி பண்டிகையின்போது சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இந்தாண்டு 2 சந்திர கிரகணங்களும், 2 சூரிய கிரகணங்களும் நடைபெறவுள்ளன. இதில் முதல் சந்திர கிரகணம் 25ஆம் தேதி காலை 10.23 மணி முதல் மாலை 3.02 மணிவரை நடைபெறவுள்ளது. இதை இந்தியாவில் காண முடியாது என்பதால், அன்றைய தினம் கோயில்கள் நடை சாத்தப்படாது. ஹோலி கொண்டாட்டங்களும் பாதிக்கப்படாது.