
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்திற்கு இன்று மற்றும் நாளை ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மழை அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கு தற்போதே விரைந்து வருகிறார்கள். அதன்பிறகு நாளை பிற்பகல் கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாளை தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நாளை புயல் காரணமாக பூங்காக்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை ஐ டி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது நாளை சென்னையில் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் அரசு அறிவுறுத்தி உள்ளது