
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பருவ மழையின் போது ஏற்படும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்காக தற்போது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த முறை வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதால் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் பொது மக்களுக்கு ஏராளமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் சேற்றுபுண் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் மருத்துவ முகாமில் சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் எந்த கிராமத்தில் காய்ச்சல் என்றாலும் உடனடியாக அங்கு மருத்துவ முகாமினை அமைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.