வங்கக்கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் பிறகு ஒரிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் அந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அது 48 மணி நேரத்தில் நகர்ந்து வலுவடைய கூடும்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் 40 முதல் 50 km வேகத்தில் தரைக்காற்று வீச கூடும்.

அதன் பிறகு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.