நமது பூமியின் சாய்வு கோணத்தால் சூரியன் ஒரே மாதிரி பயணிக்காமல் வடக்கில் 23.5 டிகிரியில் இருந்து தெற்கில் 23.5 டிகிரி வரை பயணித்து திரும்புகிறது. இதனால் ஆண்டுக்கு 2 முறை இந்த பகுதிகளுக்குள் இருக்கும் நிலப்பரப்பில் நிழலில்லா நாள் ஏற்படுகிறது. அது இன்று வட சென்னையிலும் இன்று தென் சென்னையிலும் நடக்கிறது.

சூரியன் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது சூரிய ஒளி செங்குத்தாக நம் மீது படும். அப்போது நிழல்கள் நமது கால்களுக்கு அடியில் விழும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்கு நிழல் தெரியாது. இதுபோன்று நிழல் தெரியாத நாளை நாம் நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்று அழைக்கிறோம். இந்த நிகழ்வு கடக ரேகை மற்றும் மகர ரேகை ஆகிய 2 எல்லைகளுக்கு உட்பட்ட நாடுகளில் உணரப்படும்.  உச்சிப் பொழுதில் நீங்கள் வெளியில் நின்றால் உங்களது நிழல் தரையிலேயே விழாது. டிரை பண்ணி பாருங்க.