இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பண்டிகை காலங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த காலங்களில் கூடுதல் நெரிசலை குறைக்க இந்திய ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

அதன்படி தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசதை கருத்தில் கொண்டு தாம்பரம் மற்றும் மங்களூர் வாராந்திர சிறப்பு ரயில் சேலம் வழியாக இன்று  ஏப்ரல் 25ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் மங்களூரு மற்றும் தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.