நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கு ரேஷன் கார்டு என்பது ஒரு முக்கிய ஆவணம் ஆகும். அதன் பிறகு ரேஷன் கார்டில் அனைவரும் வருகிற 31ஆம் தேதிக்குள் இகேஒய்சி சரிபார்ப்பை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ரேஷன் கார்டுகளை 3 மாதங்கள் வரை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அவர்களின் கார்டுகளை முடக்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அரசின் விதிமுறைப்படி 3 மாதங்கள் வரை ரேஷனில் பொருட்கள் வாங்காமல் வைத்திருந்தால் அவர்களின் கார்டுகள் முடக்கப்படும். தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் அப்படி பொருட்கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதன் காரணமாக அவர்களின் ரேஷன் கார்டுகளை முடக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது