
மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 26ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ஓணம் சிறப்பு ரயில் தென் மாவட்டங்கள் வழியே வந்து திருவனந்தபுரம் வழியாக கொச்சுவேலிக்கு ஆகஸ்ட் 27 காலை 8 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொச்சுவேலியில் இருந்து ஆகஸ்ட் 27ம் தேதி காலை 11.40 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் அதிகாலை 2.45 (ஆகஸ்ட் 28) தாம்பரம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது