
நேற்று பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.