
கர்நாடக மாநிலம் பெங்களூரு துரஹல்லி வனப்பகுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மோகன் நதிகா(71). கடந்த ஏப்ரல் மாதம் மோகன் நதிகாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தங்களை மகாராஷ்டிரா போலீஸ் என வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் முதியவரிடம் உங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி மோசடி செய்யதுள்ளனர். எனவே உங்களின் அடையாள அட்டை மற்றும் வங்கி ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என கூறி அவற்றை அனுப்பி வைக்குமாறு மிரட்டியுள்ளனர். இதனால் அச்சத்தில் முதியவர் தன்னுடைய ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் பேசிய மர்ம நபர் உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம் விடுவிக்க வேண்டும் என்றால் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் பணத்தை தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதனை நம்பிய முதியவரும் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதியவர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.