
சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, சமீப காலமாக வங்கிகளில் இருந்து கேஒய்சி தகவல்கள் புதுப்பிக்க வேண்டும் என குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு சைபர் குற்றவாளிகள் மக்களின் பணத்தை கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது. தெரியாத நபர்களிடம் ஒடிபி, ஆதார், வங்கி கணக்கு விவரங்களை பகிர வேண்டாம். வங்கிகளுக்கு நேரில் சென்று கேஒய்சி புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
மோசடியால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அப்படி இல்லை என்றால் cybercrime.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று புகார் அளிக்கலாம் என சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.