ரோடமைன் பி ரசாயனம் கலக்கப்பட்ட உணவை சாப்பிடுபவர்களுக்கு, புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ரோடமைன் பி என்பது துளி அளவுகூட உணவில் பயன்படுத்தக்கூடாது. இது முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஜவுளித்துறையில் உடைகளை சாயம் ஏற்றுவதற்காக இந்த நிறமியை பயன்படுத்துவார்கள். இதை சாப்பிடுவதால் 50 நாட்களிலிருந்து 60 நாட்கள்வரை அந்த நிறமியானது நம் உடலைவிட்டு போகாது.

அது நம் கல்லீரல், கிட்னி, மூளை, குடல் உள்ளிட்ட பகுதிகளில் தங்கிவிடும். நாளடைவில் இது புற்றுநோயை உண்டாக்கக்கூடும். தமிழ்நாட்டில் தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் ரோட்டமைன் பி ரசாயனம் கலக்கப்படும் உணவுகள் தடை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.