
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.