
ஹைதராபாத் நகரின் KBHB பகுதியில், ஒரு பெண்ணிடம் தண்ணீர் கேட்டுவிட்டு, தாலி சங்கிலியை திருடிய சம்பவம் சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், KBHB பகுதியில் உள்ள டெம்பிள் பேருந்து நிறுத்தம் அருகே நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு பெண், வீட்டின் முன் கோலம் போடிக் கொண்டிருந்தபோது, மர்மநபர் தண்ணீர் கேட்டு அருகில் வந்தார். அந்த பெண் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்ற போது மர்ம நபர் உள்ளே நுழைந்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபரை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர். அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி, குற்றவாளியை விரைவில் கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
సీసీ ఫుటేజ్.. మంచినీళ్లు కావాలని అడిగి మంగళ సూత్రం దొంగలించిన దొంగ
హైదరాబాద్ – KBHBలో టెంపుల్ బస్టాప్ సమీపంలోని ఓ ఇంటి వద్ద ముగ్గు వేస్తున్న మహిళని మంచినీళ్లు ఇవ్వమని అడిగి తన మెడలో నుంచి రెండున్నర తులాల బంగారు గొలుసును ఎత్తుకొని వెళ్లిన దొంగ
ఘటనపైన కేసు నమోదు చేసుకొని… pic.twitter.com/ppaeqH1KjA
— Telugu Scribe (@TeluguScribe) March 12, 2025