
சென்னை மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடியில் ஜென்னட் டெய்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி டெய்சியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தன்னை சைபர் கிரைம் அதிகாரி என் அறிமுகப்படுத்திக்கொண்டார். நாங்கள் மும்பை சைபர் கிரைம் போலீஸ்.
உங்கள் பெயரில் சிம்கார்டு வாங்கப்பட்டிருக்கிறது. அந்த சிம் கார்டு மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுள்ளது. எனவே உங்கள் வங்கி கணக்கு விவரங்களை கூற வேண்டும். ஆர்பிஐ அதிகாரிகள் சோதனை செய்வார்கள். அப்போதுதான் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் முறையானதா? அல்லது மோசடி பணமா என்பது தெரியவரும் என கூறியுள்ளார்.
இதனை நம்பி டெய்சி அவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு 38 லட்சத்தி 16 ஆயிரத்து 9 71 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு மர்ம நபர் அவரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டெய்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சென்னை அண்ணாநகர் பகுதியில் பதுங்கி இருந்த பிஜாய் என்பவரை கைது செய்தனர். அவர் சைபர் கிரைம் அதிகாரி போல பேசி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். இந்தியா முழுவதும் அவர் மீது 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.