
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் இரண்டாம் வாரத்தில் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக முன்னதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், விழுப்புரம், ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னனுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இதே போன்று காரைக்கால் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.