இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் அதிகமான நுகர்வோர்கள் குறைவான விலையில் கேஸ் சிலிண்டர்களை பெற்று பயனடைந்து வருகிறார்கள். மேலும் மத்திய அரசு சார்பாக 300 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் கூடுதலாக 25 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இதன் பயனாளிகளின் எண்ணிக்கை 10.35 கோடியாக உயரும்.

தற்போது இந்த திட்டத்தின் கீழ் சிலிண்டர்களை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம். முதலில் www.pmuy.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று PMUY இணைப்புக்கு விண்ணப்பிக்கவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் சிலிண்டரை தேர்வு செய்து ஆவணங்களுடன் அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 600 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்க தகுதி பெற்றவர் என்றால் சில நாட்களில் அதற்கான பலன்களை பெறலாம்.