நாட்டில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் சாமானிய மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இலவச மின்சாரம் கிடைக்கும் பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தையும் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின் படி வீடுகளில் மேற்கூரைகளில் சோலார் பேனல் பொருத்தப்படும். இதன் மூலம் சூரிய சக்தி மின்சாரம் கிடைக்கும். இதனால் இலவச மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படுவதோடு மக்கள் கரண்ட் பில் கட்ட வேண்டிய அவசியமும் இருக்காது.

இந்த சோலார் பேனல்கள் அமைக்க தேவைப்படும் பணத்தில் 40 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்கும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு  75 ஆயிரம் கோடி வரையில் மின்சார கட்டண செலவு குறையும். இந்த திட்டத்திற்கு சோலார் பேனல்கள் அமைப்பதற்கு ஏற்ற மேற்கூரையுடன் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில் விண்ணப்பிப்பவர்களின் வீட்டில் செல்லுபடி ஆகும் மின்சார இணைப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்புபவர்கள் https://pmsuryaghar.gov.in/#/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.