தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பழைய மோசடி செயல்கள் முடிவதற்குள் புதிய மோசடிகள் முளைத்து விடுகின்றன. இதற்கு செல்போன் எண்கள் தான் காரணம். பல்வேறு செல்போன் எண்கள் மூலமாக ஆசை வார்த்தைகளை கூறி லிங்க்குடன் கூடிய மெசேஜ் அனுப்பி அப்பாவி மக்களை மோசடி வலையில் சிக்க வைக்கின்றன. எனவே இது போன்ற சைபர் கிரைம் மோசடி வழக்குகளில் சிக்கும் செல்போன் எண்களை முடக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் இணையதளம் உருவாக்கப்பட்டது.

இதன் மூலமாக சைபர் குற்றவாளிகள் உடைய செல்போன்களை இந்த இணையதளத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் பதிவேற்றம் செய்யலாம். இந்த செல்போன் எண்கள் ஆய்வுக்குப் பிறகு முடக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 9,500 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இதே குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20,000 செல்போன் எண்களை முடக்க திட்டமிடப்பட்டுள்ளது. சைபர் கிரைம் என்றால். தனி நபர் தகவல் திருட்டு, போட்டோ மார்பிங் செய்வது, ஆன்லைன் பண மோசடியில் ஈடுபடுவது உள்ளிட்டவைகள் ஆகும். மக்களே இந்த தவறை செய்யாதீங்க!