மதுரையில் அ.தி.முக. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியதாவது “சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு துதி பாடுபவர்களுக்கு மட்டுமே மரியாதை தரப்படுகிறது. மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேச இயலவில்லை. முதல்வர் பேசுகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியம் காத்து வருகிறோம். எதிர்க்கட்சி தலைவர் பேசினால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கண்ணியம் காப்பதில்லை.

இதனிடையே சட்டமன்றம் ஜனநாயகம் முறையில் நடைபெறவில்லை. 4 துறைசார்ந்த மானிய கோரிக்கைகள் 15 நிமிடங்கள் மட்டும்தான் நடக்கிறது. தி.மு.க என்பது ரவுடி கட்சி ஆகும். அதிமுகவில் ஒபிஎஸ் இணைத்துக்கொள்வது பற்றி எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவுசெய்ய வேண்டும். அதிமுகவில் முடிவெடுப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ADMK-விலிருந்து பிரிந்து சென்றோர் மனம் மாறி திரும்பி வரவேண்டும். அதிமுகவை எதிர்ப்பது DMK-வுக்கே சாதகமாக அமையும்” என்று அவர் பேசினார்.