“நீட் வினாத்தாள் கசிவு (NEET Paper Leak) விவகாரம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், டெல்லி அரசியல் களம் தற்பொழுது போராட்டங்களால் போர்க்களமாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து இன்று காலை அவசர அவசரமாக இந்தியா திரும்பிய ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்’ (CJP) நிறுவனரும் அரசியல் வியூக வகுப்பாளருமான அபிஜித் தீப்கே, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய உடனே, ‘நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என அதிரடியாகப் பேட்டி அளித்து அதிர வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் நடத்தப்படும் பிரம்மாண்ட தொடர் போராட்டத்திற்கு டெல்லி போலீசாரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி பெறப்பட்டுள்ளது.
कॉकरोच जनता पार्टी (CJP) के फाउंडर अभिजीत दीपके शनिवार सुबह 7:45 बजे अमेरिका से दिल्ली पहुंचे। अभिजीत ने बाहर आकर अंबेडकर की किताब को हाथ में उठाया। https://t.co/lSvkmzAVSa #CockroachJanataParty #CJP #CJPProtest #JantarMantar #AbhijeetDipke #HindiNews #DelhiNews pic.twitter.com/nHIaINUTjC
— Dainik Bhaskar (@DainikBhaskar) June 6, 2026
“>
சோஷியல் மீடியாவில் வெறும் நகைச்சுவையாகத் தொடங்கி, தற்பொழுது லட்சக்கணக்கான இளைஞர்களின் பேராதரவோடு விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த ‘கரப்பான்பூச்சி’ அமைப்பின் அதிரடிப் போராட்டத்தால் ஜந்தர் மந்தர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஒட்டுமொத்த டெல்லியும் தற்பொழுது பரபரப்பின் உச்சத்தில் ஸ்தம்பித்துள்ளது.”
