தமிழக அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றிய பீலா வெங்கடேசன் காலமானார்.
அடிப்படையில் டாக்டரான அவர், இந்திய ஆட்சிப் பணியில் தேர்வு பெற்று, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராக பணியாற்றிய அனுபவமிக்க அதிகாரியாக விளங்கினார்.
குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் சவாலான சூழ்நிலையில் சுகாதாரத்துறை செயலாளராக சிறப்பாக பணியாற்றியதால், பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் புகழ்பெற்றார்.
“தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் திருமிகு. பீலா வெங்கடேசன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
திருமிகு. பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்… pic.twitter.com/Bg0zRae5am
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 24, 2025
“>
அவரது மறைவு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். “மக்களின் நலனுக்காக தன்னலமின்றி பணியாற்றிய திறமையான அதிகாரியை இழந்தது மாநில நிர்வாகத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும். பீலா வெங்கடேசனின் சேவைகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
அவரது திடீர் மறைவு, அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
