தமிழகத்தில் தவெக பெற்றுள்ள வெற்றி மற்றும் ஆட்சி அமைந்த விதம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது மிக முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “முதலமைச்சர் விஜய்க்கு வாக்களித்த மக்களை நாம் ஒருபோதும் உதாசீனப்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றம் வர வேண்டும் என்பதுதான் விஜய்யின் மனநிலை; அதனை நாம் மதிக்க வேண்டும், மக்களின் தீர்ப்பையும் மதிக்க வேண்டும்” என்று முதலில் அவரது முயற்சிக்கு மரியாதை கொடுத்தார்.
ஆனால், அதேநேரத்தில் தவெக-வின் வெற்றியை விமர்சித்த அவர், “இது ஏதோ மிகப்பெரிய பேரலை என்றெல்லாம் கிடையாது. இது மிகப்பெரிய சுனாமி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒருவேளை சுனாமியாக இருந்திருந்தால் தவெக-வுக்கு 170 எம்.எல்.ஏ-க்கள் வந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது அவர்களுக்குப் பெரும்பான்மைகூட கிடைக்கவில்லை. குறிப்பாக 8 மாவட்டங்களில் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை” எனப் புள்ளிவிவரங்களுடன் அதிரடியாகப் போட்டுடைத்துள்ளார். அன்புமணி ராமதாஸின் இந்த எதார்த்தமான அதேசமயம் நெத்தியடி பேச்சு தவெக மற்றும் பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
