
ஹரித்வார் மாவட்டத்தில் ஒரு திருமண விழா கொடூரமான சண்டையாக மாறிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொரதாபாத்தில் இருந்து வந்த மணமகன், தனது நண்பர்களுடன் கோலாகலமாக வந்த திருமண ஊர்வலத்தின் போது, விருந்து மண்டப வாசலில் ரிப்பன் வெட்டும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். அப்போது, மணமகனின் நண்பர்கள் சிலர் மணமகள் பக்கத்திலிருந்த பெண்கள் குறித்து ஆபாசமான கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து மணமகள் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, வாக்குவாதம் எரியும் தீ போல பரவியதில், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு, பின்னர் கைகலப்பு மற்றும் நாற்காலி வீச்சும் நடைபெற்றது.
சண்டையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மீது நாற்காலிகளை வீசியதால், பலர் காயமடைந்துள்ளனர். சிலர் கற்களாலும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் திருமணமண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தை அடுத்து போலீசார் வந்ததாலும், இரு தரப்பினரும் அங்கு இருந்து சென்று விட்டதாகவும், தற்போது வரை எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பகத்ராபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.
हरिद्वार में शादी समारोह के दौरान दुल्हा और दुल्हन वर और वधु पक्ष के बीच रिबन काटने की रस्म के दौरान कहासुनी शुरू हो गई। रिबन काटने की रस्म के दौरान लड़के पक्ष की ओर से लड़कियों पर की गई छींटाकशी से विवाद शुरू हुआ। लड़की पक्ष ने इसका विरोध किया तो कहासुनी शुरू हो गई जो जल्दी ही… pic.twitter.com/AarZkp5uk6
— bhUpi Panwar (@askbhupi) April 23, 2025
இந்த சம்பவத்தின் பின்னணியில், மணமகள் பக்கத்தினர் திருமணத்தை கைவிட்டனர். இதனால், பரபரப்பாக வந்திருந்த திருமண ஊர்வலம் மொரதாபாத்திற்கு திரும்பியது. திருமணம் நடைபெற வேண்டிய மகிழ்ச்சி தருணம் இப்படி சோகமாக முடிவடைந்ததால், இரு குடும்பங்களும் மனமுடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், பலரும் இத்தகைய மனக்குழப்பமான சூழ்நிலைகள் வரும் எதிர்கால திருமணங்களில் தவிர்க்கப்பட வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.