
மகிளா சம்மான் சேமிப்பு பத்திர திட்டத்திலிருந்து கிடைக்கும் வட்டியில் இனிமேல் TDS பிடித்தம் செய்யப்படாது என்று அரசு அறிவித்து உள்ளது. CBDT அறிவிப்பின் படி தகுதியான வரி அடுக்குகளின் படி, தொகை பெறுவோருக்கு கிடைக்கும் வட்டி வருமானத்தில் வரிவிதிக்கப்படும். CBDT சேமிப்பு திட்டத்துக்கான டிடிஎஸ் விதியினை மே-16ம் தேதி அறிவித்தது.
இந்த திட்டத்தின் கீழ் சிறுமிகள் (அ) பெண்களின் பெயரில் கணக்கு துவங்கலாம். அதோடு இந்த திட்டத்தில் பெற்ற வட்டிக்கு TDS பொருந்தாது என CBDT அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இதன் வட்டி ஒரு நிதி ஆண்டில் ரூ.40,000-க்கு மிகாமல் இருந்தால் வரி விதிக்கப்படாது. இத்திட்டம் 7.5 சதவீதம் எனும் விகிதத்தில் ஒரு ஆண்டில் ரூ.15,000 மற்றும் 2 வருடங்களில் ரூ.32,000 என்ற அளவிலான ரிடர்னை அளிக்கிறது