மகிலா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்பது கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிவித்த முக்கியமான முதலீடு திட்டங்களில் ஒன்றாகும். இந்த மகளிர் திட்டத்தின் காலம் இரண்டு ஆண்டுகள். இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மூலமாகவும் இந்த திட்டத்தில் பெண்கள் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் சேமிப்பு சான்றிதழ் கணக்குகளை இப்போது 12 பொதுத்துறை வங்கிகளிலும் நான்கு தனியார் துறை வங்கிகளிலும் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த திட்டத்தை தபால் நிலையங்கள் மூலம் மட்டுமே தொடங்க முடியும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த திட்டம் 7.5 சதவீதம் நிலையான வட்டி விகிதத்தை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.