உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த மாதம் மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் 45 நாட்கள்  இந்த நிகழ்ச்சி நடைபெறும். இங்கு கோடிக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். அதோடு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் மகா கும்பமேளாவில் புனித நீராடுகிறார்கள். தற்போது நடைபெறும் கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு பிறகு வந்ததால் மகா கும்பமேளா என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு காரில் சிலர் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பிராயாக்ராஜ்- மிர்ஷாபூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்து மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் இவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்த நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.