நாந்தேட் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக  முதற்கட்ட தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்  மாவட்ட அரசு மருத்துவமனையில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் சவாண்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதற்கு காரணம் அங்கு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருந்துகளின் இருப்பு குறைவாக உள்ளதும் ஒரு காரணம் என்றும் மருத்துவமனையில் 500 படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது அங்கு 1200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.