மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான பாபா சித்திக் என்பவர் கடந்த 12-ம் தேதி சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இவர்கள் பாடகர் சித்து மூஸ்வாலா உள்ளிட்டோர் கொலைக்கும் காரணமானவர்கள். அதன் பிறகு நடிகர் சல்மான் கானுக்கும் தொடர்பு கொலை மிரட்டல்கள் விடுத்து வருகிறார்கள். இந்த கும்பலின் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் வெளிநாட்டு போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்தவரை இந்த குற்ற செயல்களை அரங்கேற்றி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடல் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை கொலை செய்யும் போலீஸ்காரருக்கு கர்னி சேனா அமைப்பு 1.11 கோடி ரூபாய் பரிசு தருவதாக அறிவித்தது. தற்போது மகாராஷ்டிராவில் புதியதாக உத்தர் பாரதிய விகாஷ் சேனா என்ற கட்சி உதயமாகியுள்ளது. இந்த கட்சிதான் மகாராஷ்டிராவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் லாரன்ஸ் பிஷ்னோய் போட்டியிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் சுக்லா கூறும் போது நாங்கள் லாரன்ஸ் பிஷ்னோயை மதிக்கிறோம். எங்களுடைய கட்சி மகாராஷ்டிராவில் வசிக்கும் உத்திரப்பிரதேசம், அரியானா, ஜார்கண்ட் மற்றும் உஈத்தரகாண்ட், பஞ்சாப் போன்ற மக்களின் வாழ்க்கைக்காக போராடும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தேர்தலில் போட்டியிட சீட் தருகிறோம். மேலும் வருகிற நவம்பர் மாதம் 20ஆம் தேதி மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பஞ்சாபில் உள்ள லாரன்ஸ் பெற்றோர் தங்கள் மகனுக்கு நாங்கள் என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
