உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ரவிந்திர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அப்பகுதியில் வசித்து வந்த பஞ்சாபை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு ரவீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரும் எதிர்ப்பை மீறி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ரவீந்தர் சிங், அவருடைய தம்பி வீரேந்தர் சிங், மகன் அமன் சிங், அவர்களுடைய உறவினரான சந்தோஷ் சிங்ஈ ஆகிய நால்வரும் பஞ்சாப் சென்றனர். அப்போது மகளுடன் ஓடிய வாலிபரின் சகோதரி மட்டும் வீட்டில் இருந்தார்.

அவரை நால்வரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடைபெற்ற நிலையில் 3 மாதங்களாக இந்த சம்பவம் குறித்து  அவர் வெளியில் சொல்லாமல் இருந்தார். ஆனால் தற்போது இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆக இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.